இளையான்குடி புதுக்கோட்டையில் புதிய நியாய விலை கடையை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கட்டிடத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், ஒன்றிய கவுன்சிலர் மலையரசி ரவிச்சந்திரன், அவைத் தலைவர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி, கிளைசெயலாளர் கோபிநாதன், இளைஞர் அணி ராஜ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி தமிழ்வாணன், நன்னியாவூர் கிளை செயலாளர் தங்கசாமி, கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட பிரதிநிதி கருணாகரன் மாவட்ட விவசாய அணி காளிமுத்து, தகவல் தொழில்நுட்ப அணி கண்ணன் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment