மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி முன்னிட்டு மாபெரும் மாறுவேடப் போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் விஜயதசமி முன்னிட்டு மாபெரும் மாறுவேடப் போட்டி வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது. மிகச்சிறப்பாக சரஸ்வதி வேடம் அணிந்து ரூபாய் 2000 மதிப்புள்ள முதல் பரிசை வி. சஞ்சனா ஸ்ரீ, ரூபாய் 1500 மதிப்புள்ள இரண்டாவது பரிசை கே. இனிதா ஸ்ரீ, ரூபாய் 1000 மதிப்புள்ள மூன்றாவது பரிசை ஆர். ஹரிஷ் மித்ரன் ஆகியோர் பெற்றனர். இதில் சரஸ்வதி வேடம் அணிந்து வந்த அனைத்து குழந்தைகளுக்கும் நிச்சய பரிசும் வழங்கப்பட்டது.
பாபா மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கும், பாபா மெட்ரிக் பாபா கார்டன் மிளகனூர் சாலையில் பயிலும் மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காலாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரேங்க் பேட்ஜ் மற்றும் பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளியின் நிறுவனர் பி. ராஜேஸ்வரி அம்மா அவர்கள் பரிசு வழங்கினார், பள்ளியின் தாளாளர் ஆர். கபிலன் அவர்கள் தலைமை தாங்கினார், பள்ளியின் நிர்வாகி ஆர். மீனாட்சி அவர்கள் முன்னிலை வகித்தார், விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளியின் முதல்வர் எம். சாரதா மற்றும் ஆசிரியர்கள் மேற்கொண்டனர்.
No comments:
Post a Comment