தமிழக காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
'தி ரேடியோலாஜிகல் அஸிஸ்டெண்ட்ஸ் அசோசியேஷன்' சார்பாக தலைநகர் சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் காலை முதலே டிஎம்எஸ் வளாகத்தில் கடுமை காட்டி வந்த காவல்துறை, பல்வேறுகட்ட ஆய்வுக்குப் பிறகு வளாகத்தில் அனுமதி அளித்தனர்.
அவ்வாறு கடுமை இருந்தும் 100க்கும் மேற்பட்ட ரேடியோகிராபர்கள் கூடி பெருந்திரள் முறையீட்டை மேற்கொண்ட நிலையில் அனைவரும் ஒட்டுமொத்தமாக கைது செய்யப்பட்டனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக வாழ்த்தி பேச சென்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் டேனியல் ஜெயசிங் அவர்களையும், தென்சென்னை, வடசென்னை நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்புநர் சங்கப் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோரை கைது செய்து சமுதாயக்கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தொழிற் சங்கத்தை முடக்குவதற்கும், தொழிற்சங்க ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படும் தமிழக அரசையும், தமிழ்நாடு காவல்துறையை வன்மையாக கண்டித்தும், அடக்குமுறைக்கு எதிராக தமிழக முழுவதும் புதன்கிழமை மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்டத் தலைவர் கண்ணதாசன் அவர்களின் தலைமையில் மிக எழுச்சியாக நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் கண்டன உரையும், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் மாவட்டத் தலைவர் சேகர், தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் மாநில செயலாளர் இராஜா முகமது, தமிழ்நாடு விடுதிப் பணியாளர் சங்கம் மாவட்டத் தலைவர் கோபால், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்கம் மாநில செயலாளர் சரவணக்குமார், மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா, மாவட்ட துணைத் தலைவர் வினோத்ராஜா, மாவட்ட துணைத் தலைவர் மூவேந்தன், மாவட்ட இணைச் செயலாளர் சின்னப்பன், மாவட்ட இணைச் செயலாளர் பயாஸ் அகமது, மாவட்டத் தணிக்கையாளர் ஜெயப்பிரகாஷ்,
வட்டக்கிளை சார்பாக
வட்டக்கிளை தலைவர் முத்தையா
பொதுப்பணித்துறை நிர்வாகிகள் ஆனந்த நாகராஜன், கலைச்செல்வி
ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகி இளையராஜா, இராஜேஸ்குமார்,
ஆதிதிராவிட நலத்துறை நிர்வாகி இரவி ஆகியோர் போராட்ட உரை வழங்கி கலந்து கொண்டனர்.
இறுதியாக மாவட்ட பொருளாளர் மாரி நன்றியுரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் மற்றும் தோழமைச்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment