இளையான்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை மாணவ மாணவிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப. மதியரசன், பேரூர் கழகச் செயலாளர் பேரூராட்சி தலைவர் பி. ஏ. நஜிமுதீன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், தலைமையாசிரியர் முகமது இலியாஸ், தாளாளர் டி. எஸ். ஹச். முசாபர் அப்துல் ரஹ்மான், பள்ளி நிர்வாகிகள் அயூப்கான், அப்துல் ஹமீது, வடக்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் சிவனேசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, கவுன்சிலர் ஜெயினுலாபுதீன், இளைஞர் அணி பைரோஸ்கான், தொண்டரணி கம்பன் காதர், தகவல் தொழில் நுட்ப அணி மணி மொழியன், தாயமங்கலம் கிளைச் செயலாளர் சத்தியேந்திரன், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்தனர்.
No comments:
Post a Comment