சிவகங்கை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பாக கோரிக்கை முழக்கப் போராட்டம்.
தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் வெள்ளிவிழா மாநாட்டின் அறைகூவலின்படி அனைத்து கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்கப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள கோட்டப்பொறியாளர் நெகமப அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் இரா. மாரி அவர்களின் தலைமையிலும், துணைத் தலைவர்கள் சுதந்திரமணி, பாலசுப்பிரமணியன் மற்றும் வீரையன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் மாவட்ட பொருளாளர் இரா. தமிழ் துவக்கவுரையும், மாவட்ட செயலாளர் மு. ராஜா கோரிக்கை விளக்கவுரையும் ஆற்றினர். TNGEA மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் நிறைவுரையும், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லதா வாழ்த்துரையும், சிவகங்கை மாவட்ட பொருளாளர் சதுரகிரி மற்றும் சிவகங்கை வட்ட கிளை தலைவர் முத்தையா நன்றியுரையும் நிகழ்த்தினர். மேலும் இந்நிகழ்வில் இணைச் செயலாளர்கள் சின்னப்பன், கணேசன் மற்றும் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில்
சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிடவேண்டும். 4000க்கும் மேற்பட்ட பணியிடங்களை ஒழிக்காதே. கிராமப்புற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறிக்காதே. சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதியமாற்றம் ரூ.5,200 ரூ.20,200 தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளர்களின் பணிநீக்ககாலம் மற்றும் பணிக்காலத்தில் உயிர்நீத்தோரின் குடும்பத்திலிருந்து கருணை அழப்படையிலான பணிநியமணம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்துப்படி, சீருடை சலவைப்படி, நிரந்தரப்பயணப்படி வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் முதுநிலைப்பட்டியல் முறைகேடாக வெளியிட்டு முறைகேடான பதவி உயர்வு வழங்க காரணமான முதன்மை இயக்குநர் மீது நடவழக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு சட்டம் SEC 41(1) of TNGS (CS) ACT - 2016ன் படி சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண் : WP.NO 4126 of 2023 தீர்ப்பு நாள் : 18.09.2024-ன்படி அனைத்து கோட்டங்களிலும் மறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோரிக்கை முளைக்கப் போராட்டத்தின் மூலமாக வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment