முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் ஒன்பது லட்சம் ரொக்கம் வென்ற இளையான்குடி கோட்டையூரை சேர்ந்த இளைஞர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த கே. சசிகுமார்-மீனாள் ஆகியோரின் புதல்வன் எஸ்.எம். சந்துரு அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்காண மாநில அளவிலான கபடி போட்டி தூத்துக்குடி மாவட்ட தங்கப்பதக்கம் மற்றும் ஒன்பது லட்சம் ரொக்கம் பெற்று முதல் பரிசை வென்றார். தங்கப்பதக்கம் வென்று ஊர் திரும்பிய சந்துருவை கோட்டையூர் கிராம பொதுமக்கள், பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆகியோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சந்துருவோடு இரண்டு சகோதரர்களும் உள்ளனர், அச்ச சகோதரர்களும் கபடி வீரர்கள் என்பது, தாய் தந்தை இருவரும் இல்லாத நிலையில் தன்னுடைய மாமா வீட்டில் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment