இளையான்குடி முஸ்லிம் நல்வழி அபிவிருத்தி பள்ளியில் நடைபெற்ற 'வருமுன் காப்போம்' திட்ட நிகழ்வில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட முஸ்லிம் நல்வழி அபிவிருத்தி பள்ளியில் நடைபெற்ற 'வருமுன் காப்போம்' திட்ட நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் திரு சு. ப. மதியரசன், பேரூராட்சி தலைவர் நஜ்முதீன், பேரூராட்சி துணை தலைவர் இப்ராஹிம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் நிஷார், மதுமிதா, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தௌலத், ஜெயின், இஸ்ரின் பேகம், நடராஜன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சு. ப. தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, மாவட்ட பிரதிநிதி கருணாகரன், தொண்டரணி கம்பன் காதர், தகவல் தொழில்நுட்ப அணி மணிமொழியன், தாயமங்கலம் கிளை செயலாளர் சத்தியேந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி கலந்தனர்.
No comments:
Post a Comment