மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திற்குள் அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பி, நடவடிக்கை எடுக்குமா மின்சாரத்துறை? - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 October 2024

மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திற்குள் அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பி, நடவடிக்கை எடுக்குமா மின்சாரத்துறை?


மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திற்குள் அபாயகரமான நிலையில் உள்ள மின் கம்பி, நடவடிக்கை எடுக்குமா மின்சாரத்துறை?

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்லக்கூடிய மின் கம்பங்களின் மீது மரக்கிளைகள் விழுந்து கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பே நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மின்சாரத்துறை, நகராட்சித்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகள் துரித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது பயணிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 


பேருந்து நிலையத்திற்குள் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் கடந்து செல்லும் பிரதான இடத்தில் இத்தகைய அபாயகரமான சம்பவம் நடைபெற்றும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை பயணிகளும் பொதுமக்களும் முன் வைத்துள்ளனர். 


அதிகாரிகளின் இத்தகைய அலட்சியம் மற்றும் மெத்தன போக்கால் பொதுமக்கள் எத்தகைய அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடும் என்பதை பொறுப்பெடுத்தாமல் இருந்து வருவது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர். எனவே உடனடியாக மின்சாரத்துறை இதில் தனி கவனம் செலுத்தி அசம்பாவிதங்களை தவிர்க்க தக்கநடவடிக்கை எடுக்குமாறு பயணிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad