மானாமதுரை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக காவல் ஆய்வாளர் அறிவிப்பு.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உட்கோட்டம் மானாமதுரை காவல் நிலைய குற்ற எண்.586/2008 u/s. 147,294(b),307 IPC கீழ் தொடரப்பட்ட வழக்கானது கனம் சிவகங்கை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் SC NO.206/2010 என்ற வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.
மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளான A4 - ஆனந்தகுமார் த.பெ.நடராஜன் மறவர் தெரு மானாமதுரை. A5-பிரசாத் த.பெ.சோமசுந்தரம் ரயில்வே காலணி மானாமதுரை, A6-புண்ணியராஜ் த.பெ.பால்ராஜ் சாயல்குடி ஆகியோர்கள் மேற்படி நீதிமன்றத்தில் கடந்த 15.06.2022 ம் தேதி முதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நாளது தேதி வரைர் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே மேற்படி வழக்கின் எதிரிகள் A4-ஆனந்தகுமார் த.பெ.நடராஜன் A5-பிரசாத் த.பெ.சோமசுந்தரம் A6-புண்ணியராஜ் த.பெ.பால்ராஜ் ஆகியோர்கள் வருகின்ற 16.10.2024 ந் தேதியோ அல்லது அதற்கு முன்னரோ மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியதென்றும் தவறும் பட்சத்தில் மேற்படி எதிரிகளான A4-ஆனந்தகுமார் த.பெ.நடராஜன் A5-பிரசாத் த.பெ.சோமசுந்தரம் A6-புண்ணியராஜ் த.பெ.பால்ராஜ் ஆகியோர்களை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்படுவார் என்பதை இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துகொள்கிறோம். இவ்வாறு மானாமதுரை காவல் நிலைய ஆய்வாளர் தனது அறிக்கையின் மூலமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment