சிவகங்கையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் பேச்சுவார்த்தையின் மூலமாக சமரச தீர்வு.
சிவகங்கையில் இன்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் உள்ளிருப்பு போராட்டம் காரணமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணையின்படி சிவகங்கை கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), காவல்துறை, உளவுத்துறை, மாவட்ட திட்ட அலுவலர், CITU மாவட்டத் தலைவர் வீரையா, TNGEA மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இப்பேச்சுவார்த்தையில் குறுமைய ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் பதவி உயர்வு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக உடன்பாடு கையெழுத்திப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment