சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 October 2024

சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.


சிவகங்கையில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.


ஒருங்கிணைந்த  குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலகம் மூலமாக அரசின் ஆணைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் 5 ஆண்டுகள் பணி தகுதி முடித்த மினி மைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு பிரதான மையங்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023ல் வழங்க வேண்டிய பதவி உயர்வினை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் சிவகங்கை மாவட்ட திட்ட அலுவலர் திரு மாரியப்பன் உள்பட, இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும், உடனடியாக பதவி உயர்வு  வழங்கிட வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத் தலைவர் ஜெயமங்களம் மற்றும் மாவட்ட செயலாளர் பாக்கியமேரி ஆகியோர் தலைமையில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) நிர்வாகிகள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad