திருப்பாச்சேத்தி மாவீரர் ஸ்ரீ உதய பெருமாள் கவுண்டர் (எ) துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு நினைவேந்தல். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 5 October 2024

திருப்பாச்சேத்தி மாவீரர் ஸ்ரீ உதய பெருமாள் கவுண்டர் (எ) துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு நினைவேந்தல்.


திருப்பாச்சேத்தி மாவீரர் ஸ்ரீ உதய பெருமாள் கவுண்டர் (எ) துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு நினைவேந்தல்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் திருப்பாச்சேத்தி மாவீரர் ஸ்ரீ உதய பெருமாள் கவுண்டர் (எ) துப்பாக்கி கவுண்டரின் 223 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 


இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா, கவிஞர் சிதம்பர பாரதி, நகர் துணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், தொண்டரணி ராஜா, கவுன்சிலர் பாலகிருஷ்ணன், இளைஞர் அணி முத்துக்குமார், மாணவரணி தனசெயன், விழா குழுவினர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad