முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்திற்கு செல்லும் முதல்வருக்கு மானாமதுரையில் அமைச்சர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் திரு முத்துராமலிங்க தேவர் அவர்களின் 117-வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை விழா முன்னிட்டு, மதுரை-இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மானாமதுரை புதிய பேருந்து நிலையம் அருகில், சிவகங்கை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக மாண்புமிகு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையிலும், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களின் முன்னிலையிலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் நினைவிடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவற்காக பயணம் மேற்கொள்ளும் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு அக்கட்சியினர் மாபெரும் வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்வில் நகர் கழக செயலாளர் பென்னுசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை. இராஜமணி, நகரமன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுறை, மாவட்ட ஒன்றிய நகர பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment