மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை காந்தி சிலை வளாகத்தில் உள்ள நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நகர் மன்ற உறுப்பினர் திரு எஸ். பி. புருஷோத்தமன் அவர்களின் தலைமையிலும், முன்னாள் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் திரு ஏ. ஆர். பி முருகேசன் அவர்களின் முன்னிலையிலும் வார்டு தலைவர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டார தலைவர்கள், நகர் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், வார்டு தலைவர்கள், பூத் கமிட்டியின் நிர்வாகிகள், பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment