தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல், கருணை நியமனங்களுக்கான தடையை நீக்குதல், தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதிகளை அமல்படுத்தக் கோரியும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட துணைத் தலைவர் கார்த்திக் அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன் போராட்ட உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா, மாவட்ட துணைத் தலைவர் வினோத் ராஜா, மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இராஜா, மாவட்ட பொருளாளர் சதுரகிரி, ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட நிர்வாகிகள் பாஸ்கரன் மற்றும் தனபால், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் பாண்டி, மாவட்ட நிர்வாகி நடராஜன், பொதுப்பணித்துறை நிர்வாகி கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர், மாவட்ட பொருளாளர் மாரி நன்றியுரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட அனைத்து அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், துறைவாரி சங்க நிர்வாகிகள், தோழமைச் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment