சிவகங்கையில் கல்லூரி பயலும் மாணவ மாணவிகளுக்கு கல்விக் கடனுக்கான காசோலை வழங்கிய அமைச்சர்.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாபெரும் கல்வி கடன் முகாம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடனுக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மாவட்ட கல்வி அலுவலர் திரு வடிவேல், மாவட்ட துணை கழக செயலாளர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார், கல்லூரி மாணவ மாணவிகள், வங்கி பணியாளர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment