சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லூரியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் தனியார் துறை தொழிற்சாலைகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வேலைவாய்ப்புகளுக்கான சான்றிதழ்களை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி, மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், மாவட்ட திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கவிதப்பிரியா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணி கணேஷ், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணாத்தாள், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment