2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் சதுரங்கப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதலிடம்.. ராமநாதபுரம் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 October 2024

2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் சதுரங்கப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதலிடம்.. ராமநாதபுரம்

 


2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான மகளிர் சதுரங்கப் போட்டியில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி முதலிடம்.. ராமநாதபுரம் 



வேதாளை ராஜா கலை அறிவியல் கல்லூரியில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அழகப்பா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான, மகளிருக்கான சதுரங்கப் போட்டியில் பல்வேறு அணிகள் கலந்து கொண்ட நிலையில் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவிகள் முதல் இடம் பெற்றனர். ஆண்களுக்கான சதுரங்கப் போட்டியில் அழகப்பா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றனர். மேலும் அழகப்பா பல்கலைக்கழக அணித் தேர்விலும் அழகப்பா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தினர். சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி பாராட்டி வாழ்த்தினார். அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் அசோக்குமார் மற்றும் பேராசிரியர்களும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad