மானாமதுரையில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பாக முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 October 2024

மானாமதுரையில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பாக முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.


மானாமதுரையில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பாக முகவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரையில் உள்ள சாந்தி முருகன் மஹாலில் பாக முகவர்களுக்கான (BLA 2) கலந்தாய்வு கூட்டம் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, அரசின் திட்டங்களை இல்லந்தோறும் கொண்டு செல்லுதல், 2026 தேர்தலுக்கான முன்னெடுக்க வேண்டிய ஆயத்த பணிகள் ஆகியவை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் இலக்கியத் தென்றல் மு.தென்னவன், தொகுதி மேற்பார்வையாளர் கே. என். ஆர். போஸ், முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சுப. மதியரசன், நகரக் கழகச் செயலாளர் பொன்னுச்சாமி, நகர் மன்ற தலைவர் மாநில ஆதிதிராவிடர் குழு துணை உறுப்பினர் மாரியப்பன் கென்னடி, தெற்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வராஜ், பேரூர் கழகச் செயலாளர் நஜ்முதீன், மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கட்ராமன், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன், மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜாமணி, மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அண்ணாதுரை, திருப்புவனம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வசந்தி சேங்கைமாறன், கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் எம். ஏ.கடம்பசாமி, பேரூர் கழகச் செயலாளர் நாகூர்கனி, BLA -2 முகவர்கள், தலைமை, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து சார்பு அணியினர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad