காரைக்குடி சுப்ரீம் அரிமா சங்கத்தின் சார்பாக எல்லையில்லா அமைதி என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 October 2024

காரைக்குடி சுப்ரீம் அரிமா சங்கத்தின் சார்பாக எல்லையில்லா அமைதி என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.

 


காரைக்குடி சுப்ரீம் அரிமா சங்கத்தின் சார்பாக எல்லையில்லா அமைதி என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.


சர்வதேச அரிமா சங்கத்தின் வழிகாட்டுதல்படி 'எல்லையில்லா அமைதி' என்ற தலைப்பில் மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டி சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி சுப்ரீம் அரிமா சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வுக்கு மாவட்ட அமைச்சரவை பொருளாளர் லயன் டாக்டர் மருதப்பன் அவர்களின் முன்னிலையிலும், ஓவிய போட்டியின் பொறுப்பாளர் திரு இளங்கோவன் டி. சி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 


இந்நிகழ்வை சுப்ரீம் அரிமா சங்கத்தின் தலைவர் எம்.ஜே.எப் திரு பாப்பாத்தி கணேசன், செயலாளர் லயன் திரு அருண் போஸ், பொருளாளர் லயன் திரு சி.டி.என் மணிகண்டன், மாவட்ட தலைவர் லயன் ஏ.ஆர்.எஸ். பாண்டியன் உட்பட அரிமா சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டி உரையாற்றினார் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி அங்கயர் கன்னி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad