தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டியில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சாய் மகிழ் யோகா மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை.
தென்னிந்திய அளவிலான யோகாசன போட்டியானது ஞாயிற்றுவிழமையன்று கரூரில் உள்ள ஸ்ரீ சங்கரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு யோகா கூட்டமைப்பில் இருந்து சிவகங்கை மாவட்டம் சார்பாக காரைக்குடி, தேவக்கோட்டை, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை போன்ற பகுதிகளிலிருந்து சுமார் 65 மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிக்கோப்பைகளும், சான்றிதழ்களும் பெற்றனர்.
இம்மாணவர்கள் அனைவரும் சாய் மகிழ் யோகா மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்பதும், தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சிவகங்கை மாவட்ட செயளாலரும் சாய்மகிழ் யோகா மையத்தின் பயிற்சியாளருமான யோகா ஆச்சாரிய பூ. புவனேஷ் அவர்கள் மாணவர்களை பயிற்றுவித்து வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் கலந்துக் கொண்டு பரிசுகள் பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு யோகா கூட்டமைப்பு சிவகங்கை மாவட்ட செயளாலரும் சாய் மகிழ் யோகா மையத்தின் பயிற்சியாளருமான யோகாஆச்சாரியர் பூ. புவனேஷ் அவர்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment