சிவகங்கையில் தமிழ்நாடு அரசு வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் 8-வது வட்டார மாநாடு நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 28 October 2024

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் 8-வது வட்டார மாநாடு நடைபெற்றது.


சிவகங்கையில் தமிழ்நாடு அரசு வளர்ச்சிதுறை அலுவலர்கள் சங்கத்தின் 8-வது வட்டார மாநாடு நடைபெற்றது. 


தமிழ்நாடு அரசு வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகக் கிளையின் 8-வது வட்டார மாநாடு சிவகங்கையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக வளாக கூட்டரங்கத்தின் தோழர் வசந்தி அரங்கத்தில் தலைவர் திரு எம். சுந்தர மகாலிங்கம் அவர்களின் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கப்பெற்று நடைபெற்றது. இம்மாநாட்டின் நினைவாக உதவி திட்ட அலுவலர்கள் மரக்கன்றுகளை நாட்டினர். 


அதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு செ. அன்பு அவர்கள் மாநாடு பேரணியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கலைச்செல்வராஜன் மற்றும் கேசவநாதன் ஆகியோர் தகவல் பலகையை திறந்து வைத்தனர். தமிழ்நாடு அரசு வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் 8-வது வட்டார மாநாட்டின் சிறப்பு நிகழ்வாக மாவட்டத் திட்ட இயக்குனர் முனைவர் திரு ஆ. ரா.‌ சிவராமன் அவர்கள் மாநாடு கல்வெட்டை திறந்து வைத்தார். 


அச்சிறப்பு நிகழ்வை தொடர்ந்து வரவேற்புரை, அஞ்சலி தீர்மானம், தொடக்கவுரை, செயலாளர்  அறிக்கை, வரவு செலவு அறிக்கை மற்றும் வாழ்த்துரை ஆகியவை வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக இம்மாநாட்டில் அறிக்கை மீதான விவாதங்களும் மற்றும் நிர்வாகிகள் தேர்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் நிர்வாகத் தோழர்கள் தீர்மானங்களை முன்மொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் நிறைவுரையை மாவட்ட செயலாளர் திரு இரா. ராதாகிருஷ்ணன் வழங்கினார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், அரசு அதிகாரிகள், தமிழ்நாடு அரசு வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், தோழர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad