காரைக்குடி அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் சுமார் 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டஉடற்கூறாய்வு உள்ளிட்ட புதிய கட்டிடத்தை மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் அவர்கள் திறந்து வைத்தார். இதில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஏ. சி. சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், மாநில மாவட்ட தொகுதி நகர வட்டார ஒன்றிய மாநகர பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமைக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment