மானாமதுரையில் மழைநீரால் தம்பித்த நெடுஞ்சாலை போக்குவரத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் உடனடியாக சரி செய்த 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட ஐந்தாவது வார்டில் உள்ள நல்லதம்பி பிள்ளை தெரு, வடக்கு புது தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை இரவு பெய்த மழையின் காரணமாக சிவகங்கை செல்லும் பிரதான நெடுஞ்சாலை முழுவதும் மழை நீரானது சூழ்ந்து கொண்டதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் மற்றும் வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் 5வது வார்டு நகர மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் அவர்களின் பெரும் முயற்சியால் மழைநீரை ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் வழியாக அப்புறப்படுத்தி சரி செய்யப்பட்டது. மழைநீரை அப்புறப்படுத்தி நெடுஞ்சாலை போக்குவரத்து இடையூறை சீர் செய்த நகர்மன்ற உறுப்பினர் அவர்களை வார்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்.
No comments:
Post a Comment