காரைக்குடியில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற சிவகங்கை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்.
சிவகங்கை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காரைக்குடியில் உள்ள அபூர்வா மஹாலில் மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் நான்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய பணிகள், கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்தும், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் மறைந்த முரசொலி செல்வம் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் அ. கணேசன், முன்னாள் அமைச்சர் இலக்கிய தென்றல் மு. தென்னவன், மாவட்ட கழக பொருளாளர் துரைராஜ், தொகுதி பார்வையாளர்கள் திருப்பத்தூர் தொகுதி முன்னாள் அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன், மானாமதுரை தொகுதி மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கே. என். ஆர். போஸ், சிவகங்கை தொகுதி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் (புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்) சண்முகம், காரைக்குடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாநில விவசாய அணி துணைச் செயலாளர் முருகவேல், மாவட்டத் துணைச் செயலாளர் சேங்கைமாறன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில், மாநகராட்சி செயலாளர் குணசேகரன், அனைத்து அணிகளை சேர்ந்த அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து ஒன்றிய பேரூர் நகர ஊராட்சி கழக செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment