இளையான்குடி முனைவின்றி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு விலையில்லா மிதிவண்டியை மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் முனைவென்றியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா இருசக்கர மிதிவண்டியினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வெங்கட்ராமன், மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் மலைமேகு, பள்ளி தலைமையாசிரியர் பாண்டிதுரை, ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள், கிளைச் செயலாளர் இளங்கோவன், சுந்தர்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சௌந்தர், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் லெனின், விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பாலசந்தர், ஒன்றிய பொறியாளர் அணி அகிலேஷ், பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர் முருகேசன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கவிதா, ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment