அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று மன்றத் துவக்க விழா மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்களின் வரவேற்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாவரவியல் துறைத் தலைவரும், பொறுப்பு முதல்வருமான முனைவர் கோமளவல்லி தலைமை வகித்தார். வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் நிலோபர் பேகம் முன்னிலை வகித்தார். மூன்றாம் ஆண்டு மாணவர் பிரவீன் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். முனைவர் வேலாயுதராஜா சிறப்பு விருந்தினர் அறிமுக உரையாற்றினார். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் ஜாகிர் உசேன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வரலாற்றுப் பாடத்தின் சிறப்புகள் குறித்தும், வரலாறு பயின்று சாதனை படைத்தவர்கள் குறித்தும் விளக்கிப் பேசினார். வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் முத்துக்குமார், முனைவர் மார்ட்டின் ஜெயப்பிரகாஷ், முனைவர் குணசேகரன், முனைவர் சரவணன், கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் கிளிமொழி, முனைவர் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இரண்டாம் ஆண்டு மாணவி செல்வி சௌந்தர்யா நன்றி கூறினார். முதுகலை பயிலும் மாணவர்கள் ஹேமா , சந்துரு மற்றும் இளங்கலை மாணவர்கள் நிகிதா ஸ்ரீ ,மணிகண்டன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
No comments:
Post a Comment