அழகப்பா அரசு கலைக் கல்லூரி மற்றும் காரைக்குடி நியூஸ் நிறுவனம், காரைக்குடி அரசு ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 October 2024

அழகப்பா அரசு கலைக் கல்லூரி மற்றும் காரைக்குடி நியூஸ் நிறுவனம், காரைக்குடி அரசு ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம்

 


அழகப்பா அரசு கலைக் கல்லூரி மற்றும் காரைக்குடி நியூஸ் நிறுவனம், காரைக்குடி அரசு ரத்த வங்கியுடன் இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான முகாம் 


அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.  இம் முகாமிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்தார்.   காரைக்குடி நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் பூமிநாதன் ரத்ததான முகாமினைத் துவக்கி வைத்தார். காரைக்குடி நியூஸ் நிறுவனர் அன்புமதி, காரைக்குடி அரசு ரத்த வங்கியின் அலுவலர் மருத்துவர் ராஜ்குமார்,


மருத்துவர் ஷமீம், புதுவயல் சுகாதார மேற்பார்வையாளர் முத்துவேல் ஆகியோர் பங்கேற்றனர் .இதில் திரளான மாணவர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் சுந்தரி, முனைவர் தெய்வமணி, முனைவர் லட்சுமணக்குமார், முனைவர் செந்தில்குமார் மற்றும் யூத் ரெட் கிராஸ் பெற்ற அலுவலர் முனைவர் பாரதி ராணி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். 


மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad