மானாமதுரை வைகை ஆற்று கரையோரங்களில் மண்ணரிப்பை தடுக்க மரக்கன்று நடுவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வைகையாற்றினை பதப்படுத்தும் பொருட்டு வைகை ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள கரையோரங்களில் மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கும் வகையில் மரக்கன்று நடுவது குறித்து மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்களின் தலைமையில் வனத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் வனத்துறை அதிகாரிகள், கட்சியின் நிர்வாகிகள், ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment