மானாமதுரை அரசு மருத்துவமனையில் பணியாளர்களை உடனடியாக நிரப்பக்கோரி தாய் தமிழர் கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டிய மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்களை உடனடியாக நிரப்பக்கோரி தாய் தமிழர் கட்சி சார்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ச. அ. செல்வம் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்களுக்கு மனு அளித்துள்ளார்.
அம்மனுவில் அவர் கூறியுள்ளதாவது, "மனித உரிமைகளில் மிக மிக முக்கியமான உரிமை வாழ்வுரிமையாகும். அப்படிப்பட்ட உரிமையின் உள்ளடக்கம் தான் சுகாதார உரிமை. பேரூராட்சியாக இருந்த மானாமதுரை இன்று மக்கள் தொகையின் பெருக்கத்தின் காரணமாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. மானாமதுரை ஒன்றியத்தின் 48 ஊராட்சிகள் உள்ளன. இதனால் ஆண்டுதோறும் மக்கள் தொகை உயர்ந்து கொண்டே செல்கிறது.
ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப 14 மருத்துவர்கள் மானாமதுரைக்கு அரசு மருத்துவமனையில் இருக்க வேண்டும் ஆனால் மருத்துவர்கள் குறைக்கப்பட்டு உள்ளனர். மக்களை தேடி மருத்துவம் பார்த்தது போதும், தேடி வரும் மக்களுக்கு உரிய மருத்துவமும் உரிய சிகிச்சையும் அளித்து மனித மாண்புகள் காக்கப்பட வேண்டும். எனவே மானாமதுரை அரசு மருத்துவமனையில் அரசால் உறுதிசெய்யப்பட்ட 14 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டுமென தாய் தமிழர் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்வதாக வலியுறுத்தியுள்ளார்".
No comments:
Post a Comment