சிவகங்கை மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 September 2024

சிவகங்கை மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

 


சிவகங்கை மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியின் ஆலோசனை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக ஆக்க பணிகள், சட்டமன்ற தேர்தல் பணிகள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசி ரவிக்குமார் அவர்கள் கலந்து கொண்டு பேருரை ஆற்றினார்.


இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி பவானி ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மாவட்ட மகளிர் தொண்டர் அணி தலைவர் அன்னை தெரசா, ஒன்றிய கழகச் செயலாளர் முத்துராமலிங்கம் மற்றும் எம். ஏ. கடம்பசாமி, கட்சி நிர்வாகிகள் மாவட்ட மகளிர் அணி மற்றும் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad