திருப்புவனம் காவல் நிலையத்தில் ராகுல் காந்திக்கு எதிராக விமர்சனம் செய்த பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் புகார்.
இந்திய பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு ராகுல் காந்தியை கொலை செய்ய, காயம் ஏற்படுத்த, தர்வீந்தர் சிங் மர்வா, சஞ்சய் கெய்க்வாட், தமிழ்நாடு பாஜக பொறுப்பு குழு தலைவர் எச். ராஜா, உபி மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு ஆகியோரின் வெளிப்படையான தொடர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி திருப்புவனம் காவல் நிலையத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ராஜிவ் கண்ணா, நகர் சிறுபான்மை அணி தலைவர் சையது அபு, பசியாபுரம் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராமர், கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி லிங்கேஸ்வரன், கொந்தகை இளைஞர் காங்கிரஸ் கமிட்டி சூர்யா, மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.
No comments:
Post a Comment