திருப்பாச்சேத்தி அடுத்த படமாத்தூர் சாலையில் குடும்பத் தகராறில் இருவர் கொலை, இரண்டு பேர் மீது வழக்கு பதிவு. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 September 2024

திருப்பாச்சேத்தி அடுத்த படமாத்தூர் சாலையில் குடும்பத் தகராறில் இருவர் கொலை, இரண்டு பேர் மீது வழக்கு பதிவு.

 


திருப்பாச்சேத்தி அடுத்த படமாத்தூர் சாலையில் குடும்பத் தகராறில் இருவர் கொலை, இரண்டு பேர் மீது வழக்கு பதிவு.


சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த படமாத்தூர் சாலையில் வசித்து வருபவர் பாண்டிலெட்சுமி மகள் சோனியாகாந்தி. சோனியாகாந்தியின் கணவர் பெயர் பசுபதி. இத்தம்பதியினருக்கு கீர்த்தனா, தினேஷ் மற்றும் மலைராஜ் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். சோனியாகாந்தியின் அக்கா மங்கையர்கரசி சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் பசுபதி தனது மனைவி மற்றும் மகள் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் தகாத வார்த்தையில் பேசி, அடித்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக கடந்த வாரம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதனை அடுத்து சோனியாகாந்தி மற்றும் அவருடைய மகன் எங்கு சென்றனர் என்று தெரியாத நிலையில், பசுபதி மற்றும் அவரது அண்ணன் அழகுசுந்தரம் ஆகியோர் கடந்த புதன்கிழமையன்று சோனியாகாந்தி வீட்டிற்கு கையில் அரிவாளுடன் சென்றுள்ளனர். சோனியாகாந்தி எங்கே என்றும், இதற்கெல்லாம் காரணம் நீதான் என்று மாமியார் பாண்டிலெட்சுமி (60) மற்றும் பாண்டிலெட்சுமியின் தாயார் சொர்ணமுத்து (84) ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அறிவாளால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 


சரமாரியான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட பாண்டிலெட்சுமி மற்றும் அவருடைய தாயார் பலத்த காயங்களுடன் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதனை இருவரும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த பாண்டிலெட்சுமியை நேரில் பார்த்த சப்பானி மகன் தினகரன் என்பவர் புதன்கிழமை மதியம் மூன்று மணியளவில் சென்னையில் உள்ள மங்கையர்கரசிக்கு போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். 


இதனையடுத்து வியாழக்கிழமை காலை மங்கையர்கரசி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பசுபதி மற்றும் அவரது அண்ணன் அழகு சுந்தரம் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அழகுசுந்தரத்தின் மேல் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad