கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 2 September 2024

கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

 


கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து சிவகங்கையில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் - சிவகங்கை மாவட்டம் சார்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொல்கத்தாவில் முதுநிலை பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்தும், பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவிக்கு நீதி கேட்டு திங்கள்கிழமை மாலை 'மெழுகுவர்த்தி ஏந்திய ஆர்ப்பாட்டம்' தோழர். கண்ணதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


இதில் கோரிக்கை விளக்கவுரையை தோழர். இராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார். மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் பாண்டி, தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கம் பி. பாண்டி, மாவட்ட துணைத் தலைவர், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் பாஸ்கரன், மாவட்ட இணைச் செயலாளர் சின்னப்பன், முன்னாள் படைவீரர் நலத்துறை முருகன், தமிழ்நாடு சிறுபான்மையினர் விடுதிப் பணியாளர் சங்கம் கோபால், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அலுவலர்கள் சங்கம் கலைச்செல்வி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.


நடைபெற்ற முடிந்த இந்த ஆர்பாட்டத்தில் கூறப்பட்டதாவது, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை 2 -ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்த மாணவி, கடந்த ஆகஸ்டு 9-ஆம் தேதி இரவு பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். 


இந்த கொடுஞ்செயலை கண்டிக்கின்ற வகையில் அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் அறைகூவலுக்கிணங்க மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து தூக்கிலிடவும், இந்திய நாட்டில் இது போன்ற குற்ற செயல்கள் வேறு எங்கும் நடந்திடாத வண்ணம் பெண் குழந்தைகள், மாணவியர்கள், பெண் ஊழியர்கள் என ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியும், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மீதான பாலியல் சுரண்டலைத் தடுத்து நிறுத்திடவும் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற இம்மாபெரும் ஆர்ப்பாட்டம் மூலமாக வலியுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இறுதியாக மாவட்ட பொருளாளர் மாரி நன்றி உரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏணைய அரசு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad