மானாமதுரையை அடுத்த எஸ். காரைக்குடி அருகே அதிவேகமாக சென்ற ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்ததில் ஒருவருக்கு பலத்த காயம்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த எஸ். காரைக்குடி அருகில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் சென்ற ஆட்டோ ஒன்று, வளைவில் அதிவேகமாக ஆட்டோவை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோவை ஓட்டுநர் சடன்-பிரேக் அடித்ததில் அதே ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயங்களுடன் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.
மேலும் ஒரு பள்ளி மாணவிக்கும் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோவில் பயணித்த பள்ளி மாணவிகள் நூலிலையில் தப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அஜாக்கிரதையாகவும் அதிவேகமாகவும் ஆட்டோவை இயக்கிய ஆட்டோ ஓட்டுநர் மது அருந்ததியாக ஆட்டோவில் உள்ளவர்கல் கூ ரினர்.எனவே ஆட்டோ ஓட்டுநர் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இளையான்குடி செய்தியாளர் இரா.ஓம்பிரகாஷ்
No comments:
Post a Comment