மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் 'தூய்மையே எனது பழக்கம், தூய்மையே எனது வழக்கம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் பாபா மெட்ரிக் பள்ளி மற்றும் மானாமதுரை நகராட்சி இணைந்து நடத்திய "தூய்மையே எனது பழக்கம், தூய்மையே எனது வழக்கம்", நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாபா மெட்ரிக் பள்ளி தாளாளர் திரு ஆர். கபிலன், பள்ளி நிர்வாகி திருமதி ஆர். மீனாட்சி கபிலன், முதல்வர் திருமதி எம். சாரதா, மானாமதுரை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு பாலமுருகன் மற்றும் துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பற்றிய விழிப்புணர்வை மாணவ மாணவிகள் வில்லுப்பாட்டு, பேச்சுப்போட்டி, மாறுவேடப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளின் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment