காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு என்ற தலைப்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் ஆதரவுடன் 6 நாள் பயிற்சி நடைபெற்று 27.09.2024 அன்று நிறைவுற்றது. சிவகங்கை மாவட்ட பொறியியல் கல்லூரிகளிருந்து 300 இறுதியாண்டு மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் பாஸ்கரன் தலைமைவகித்தார். முதல் நாளில் தொழில்துறையின் எதிர்பார்ப்பு பற்றி முனைவர் நிக்சன் அசரியா மற்றும் திரு. எஸ். சுதிர் இரண்டாம் நாளில் தலைமைத்துவ வளர்ச்சி பற்றி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் நாகராஜன் நிறைவு நாளில் தொழில்முனைவோருக்கான நிதி ஆதாரங்கள் மற்றும் அரசு நிதி திட்டங்கள் பற்றி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் வங்கி மேலாளர் பிரவின்குமார் EDII ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment