மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 September 2024

மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி,  பாபா கார்டன், மற்றும் பாபா நர்சரி பள்ளியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி சிறப்பாக நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கனரா வங்கி மானாமதுரை கிளை மேலாளர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு கனரா வங்கியில் ஆசிரியர்களுக்கான சலுகைகள் குறித்து எடுத்துரைத்தார்.


குறிப்பாக பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் அம்மா பி. ராஜேஸ்வரி அவர்கள் பரிசுகள் வழங்கினார். இவ்விழாவிற்கு தாளாளர் திரு ஆர். கபிலன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி ஆர். மீனாட்சி முன்னிலை வகித்தார். இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகளை பள்ளி முதல்வர் திருமதி எம். சாரதா மற்றும் பொறுப்பாசிரியர் பாண்டியம்மாள் ஆகியோர் மேற்கொண்டனர். மேலும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் நகைச்சுவை மன்றத்தின் சார்பாக ஆசிரியர்கள் தின சிறப்பு நிகழ்வில் பாபா பள்ளி ஆசிரியர்களான திரு ஒய். ஆப்ரகாம் மற்றும் செல்வி சி. காயத்ரி ஆகியோருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad