சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முயன்ற பெண் துணை கண்காணிப்பாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில் நடைபெற்ற சாலைமறியலின்போது அத்துமீறிய இளைஞர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றபோது காவல்துறை துணை கண்காணிப்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக துணை கண்காணிப்பாளர் ஒரு பெண் என்பதாலேயே கயவர்களுக்கு அத்தகைய துணிச்சல் வந்துள்ளது. அந்த காணொளியை பார்க்கும்போது தாக்குதல் தொடுத்தவர்கள் நடந்து வரும் போதும், தாக்குதல் தொடுக்கும் போதும் அவர்களின் உடல் மொழியில் எவ்வித அச்சமுமின்றி நடந்து கொள்வதையும், தாக்குதலை அந்த இளைஞர்களே முன்னெடுப்பதும், குறிப்பாக பெண் துணைக் கண்காணிப்பாளர் மீது மட்டும் வண்மத்துடன் தாக்குதல் நடத்துவதையும், அவரை அவமானப்படுத்த முயல்வதையும் காணும்போது மிகுந்த கவலையும் வேதனையும் அளிக்கிறது. காவல்துறையில் அதிலும் அரசு உயர் பொறுப்பில் உள்ள ஒரு பெண் அதிகாரிக்கு பொதுவெளியில் இதுபோன்று நிகழ்ந்தால் சாதாரண பெண்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுகிறது. எனவே தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து கயவர்கள் மீதும் உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசையும், காவல்துறையையும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டம் சார்பாக வலியுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment