மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை அரசு மருத்துவமனையில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் ஆய்வு மேற்கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். மேலும் உடனடியாக அரசின் கவனத்திற்கு அனைத்து கோரிக்கைகளை முன்வைத்து உரிய தீர்வு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் நகர் கழகச் செயலாளர் க. பொன்னுச்சாமி, திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம். ஏ. கடம்பசாமி, நகர் கழக அவைத்தலைவர் ரவி, கலை இலக்கிய அணி சோமசுந்தரம், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராம், உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment