சிவகங்கையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பாக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவர் திரு சி பெர்னாண்டஸ் ரத்தின ராஜா அவர்களின் தலைமையில் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, சிவகங்கை மாவட்ட சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு, அனைத்து பிரிவுகளை சேர்ந்த சிறுபான்மை சமூக தலைவர்களுடன் முதற்கட்ட சந்திப்பு மற்றும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment