மானாமதுரை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக மானாமதுரை வட்டக்கிளை சார்பாக 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்களமாக அறிவிக்கவும், இறந்த சாலை பணியாளர்கள் வாரிசுகளுக்கு பணி வழங்கிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மாநில நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தை வலியுறுத்தி எம். பாண்டி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், கோரிக்கை விளக்க உரையை வட்டக்கிளை செயலாளர் எஸ். ஆசைத்தம்பி அவர்களும், வாழ்த்துரையை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பூமா அவர்களும், மாவட்ட தலைவர் இரா. மாரி நிறைவுரையும், வட்டக்கிளை பொருளாளர் ரா. திருநாவுக்கரசு நன்றியுரையும் ஆற்றினர். மேலும் இந்நிகழ்வில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment