சிவகங்கையில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக தமிழகம் முழுவதும் உள்ள உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் சிவகங்கை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக சிவகங்கை வட்டக்கிளை சார்பாக 'தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதைக் கைவிட வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உட்கோட்ட தலைவர் பழனி அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் மாரி, மாவட்ட செயலாளர் இராஜா, மாவட்ட பொருளாளர் சதுரகிரி, மாவட்ட இணை செயலாளர் சின்னப்பன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இராதாகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளர் பயாஸ் அகமது, சாலை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தையா, தமிழ்நாடு அனைத்து ஓய்வுபெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பாண்டி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கோபால் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment