இளையான்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு, குடும்பத்தினர் போராட்டம், குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்ற கோட்டாட்சியர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 September 2024

இளையான்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு, குடும்பத்தினர் போராட்டம், குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்ற கோட்டாட்சியர்.


இளையான்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு, குடும்பத்தினர் போராட்டம், குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்ற கோட்டாட்சியர்.



சிவகங்கை மாவட்டம் இளையான்குடி-சீத்தூரணி கிராம சாலையில் உள்ள பிஸ்மில்லா நகரில் வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டிக்கான பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்ட சித்தூரணி கிராமத்தை சேர்ந்த ராமையா (50) மற்றும் திருவுடையார் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் (50) ஆகிய இரண்டு பேரும் விசவாயு தாக்கி இறந்தனர். இவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 



உடல்களை வாங்க மறுத்த உறவினர்கள் இளையான்குடி-பரமக்குடி செல்லும் சாலையில் உள்ள கண்மாய்கரை பகுதியில் அவ்விருவருக்கும் நஷ்டஈடு வழங்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து உறவினர்களிடம் சமரசத்தில் ஈடுபட்ட இளையான்குடி கோட்டாட்சியர் திரு விஜயகுமார் மற்றும் காவல்துறையினர் உறவினர்களின் கோரிக்கைகளான இரண்டு பேரின் மரணத்திற்கு நிவாரணமாக தலா ரூபாய் 30 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற கோரிக்கையை ஏற்று உத்தரவாதம் அளித்தனர். கோட்டாட்சியரின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad