சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில், வருமான வரியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரியின் பொறுப்பு முதல்வர் முனைவர் கோமளவல்லி தலைமை வகித்தார். கல்லூரியின் இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் சுப்பு வரவேற்புரை ஆற்ற, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வருமான வரித்துறை துணை ஆணையர் சாந்தசொரூபன் சிறப்புரை ஆற்றினார். மேலும் வருமானவரித் துறை அதிகாரிகள் வனிதா மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களிடையே வருமான வரியின் அடிப்படைகள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, வருமான வரியை செலுத்துவதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்து, வளர்ந்து கொண்டிருக்கும் நம் நாடு கூடிய விரைவில் வல்லரசு நாடாகும் என்று தங்கள் சிறப்புரையில் கூறினர். பின் வருமானவரித்துறை அதிகாரிகள் மாணவர்களிடையே கலந்துரையாடி, மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கினர். கல்லூரியின் வணிகவியல் மற்றும் தொழில் நிர்வாகவியல் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். வருமானவரித்துறையை சார்ந்த பத்மாவதி நன்றி கூறினார்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment