சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரியில் தொழில் முனைவோருக்கான பயிற்சிப் பட்டறை
2024 செப்டம்பர் 27 காரைக்குடி இராமசாமி தமிழ்க் கல்லூரி, மதுரை நிகழ் அறக்கட்டளையுடன் இணைந்து தமிழ் மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சிப் பட்டறையை நடத்தியது . இப் பயிற்சிப் பட்டறையின் தொடக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் செ. நாகநாதன் தலைமையுரை ஆற்றினார் .உதவிப் பேராசிரியர் அன்பு மெய்யப்பன் வரவேற்புரை வழங்கினார் . மதுரை நிகில் அறக்கட்டளையின் நிறுவனர் திரு சோம. நாகலிங்கம் பயிற்சிப் பட்டறை பற்றிய நோக்க உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் நிகில் அறக்கட்டளையின் பயிற்சியாளர்கள் திரு வினோத்குமார் திரு ஜெயக்குமார் திரு பாண்டியராஜன் ஆகியோர் மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தனர். தொழில் முனைவோர் திறன்கள் தொடர்பான இப்பயிற்சிப் பட்டறையில் மாணவர்கள் புதிய தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகள் விதிமுறைகள், தொழில் வாய்ப்புகள் என்று பல பொருண்மைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது . இப் பயிற்சிப் பட்டறையில் தமிழ்க்கல்லூரியை சேர்ந்த 94 மாணவர்கள் பயன் பெற்றனர். காலை 10 மணிக்குத் தொடங்கிய பயிற்சி பட்டறை மாலை 4 30 மணிக்கு நிறைவுபெற்றது. நிறைவு விழாவில் மாணவர்களுக்குப் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment