ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்ளும் பாஜகவை சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸார் மானாமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .
கடந்த ஒரு வார காலமாக மாண்புமிகு இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு ராகுல் காந்தி அவர்களை 'தர்வீந்தர் சிங் மர்வா, சஞ்சய் கெய்க்வாட், தமிழ்நாடு பாஜக பொறுப்பு குழு தலைவர் எச். ராஜா, உபி மாநில அமைச்சர் ரகுராஜ் சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் பிட்டு' ஆகியோர் "தேசவிரோதி, இந்தியாவின் நம்பர் ஒன் பயங்கரவாதி, நாட்டின் நம்பர் ஒன் பயங்கரவாதி, ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு, உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும்" என்பது போன்ற 'வெறுக்கத்தக்க, அருவருக்கத்தக்க கருத்துக்கள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்களை சட்டம் ஒழுங்கை சிர்குலைக்கும் வகையில்', நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்றும் பாராமல் திரு ராகுல் காந்திக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை நாட்டின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் அரியானா மாநிலத்தில் நடந்து வரும் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களின் அமைதியை சீர்குலைக்க முயலும் வகையில் மேற்கொள்ளும் இந்த அருவருக்கத்தக்க பிரச்சாரங்களை பரப்பி வரும் மேற்கண்ட பாஜகவை சேர்ந்த உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தேசிய தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி, மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் அவர்களின் தலைமையிலான காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மானாமதுரை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
No comments:
Post a Comment