சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் எழுச்சி உரையாற்றினார் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை உள்ள சிவன் கோயில் அருகில் சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக வரலாறு எம்மை வழி நடத்தும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் மாபெரும் எழுச்சி பேருரை ஆற்றினார். முன்னதாக சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள ராணி வேலுநாச்சியார் அவர்களின் திருஉருவ சிலைக்கு சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment