மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ப. சிதம்பரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய நிர்வாகிகள்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாண்புமிகு முன்னாள் மத்திய நிதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமான நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன் அவர்களின் தலைமையில் கேக் வெட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொருளாளர் ஏ. ஆர். பி முருகேசன், மாவட்டம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் திரு து. ஜ. பால் நல்லதுரை, வட்டார தலைவர் தங்கச்சாமி ராம்கி, கட்சி நிர்வாகிகள் வழக்கறிஞர் முத்துக்குமார், ராமு, காசி, நாகராஜ், நாகூரம்மாள், நாகவள்ளி, பொம்மு, பார்த்திபன், சீதை, மணிவண்ணன், நகர, வட்டார, பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment