இளையான்குடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 15 September 2024

இளையான்குடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள்.


இளையான்குடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்திய கட்சி நிர்வாகிகள்.


சமூக நீதி, மாநில உரிமை, மொழி உரிமை தொடர்பான சிந்தனையை வெற்றிகரமாக அரசியல் படுத்தியவர். அப்படி அரசியல் படுத்துவதற்காக மேடை, பத்திரிக்கை, நாடகம், சினிமா, நூல்கள் என்று எல்லா ஊடகங்களையும் கையில் எடுத்து அதற்கு புதிய தோற்றமும் தந்த பேரறிஞர் அண்ணாதுரை அவர்களின் 116 வது பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் இளையான்குடியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ச்சியாக இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் நாகமுகுந்தன்குடி நாகநாதர் கோவில் கும்பாபிஷேக விழாவிலும் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், பேரூர் செயலாளர் நஜூமுதீன், கண்ணமங்கலம் கூட்டுறவு தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காளிமுத்து, பேரூராட்சி துணைத் தலைவர் இப்ராஹிம், ஒன்றிய துணை செயலாளர் கலந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad